புராண காலத்தில் வாழ்ந்தவர்கள் பற்றிய கதைகள் முதல் சமூகம், நகைச்சுவை ஆகியவற்றை கொண்ட நாடகங்கள் புராண நாடகங்கள் ஆகும். ராமானுஜர், வாதவூரான், தேவலீலா போன்ற சரித்திர காலத்தில் வாழ்ந்தவர்கள் பற்றிய கதைகளை நாடகமாக்கி மக்களின் மனதில் நின்ற நாடகங்கள் இது.
புராண இதிகாசங்கள் தேவையா?
புராண இதிகாச நாடகங்கள் இன்று மக்களுக்குத் தேவையா? எனச் சிலர் நினைக்கிருர்கள். அவர்கள் நாடக நல்லியல்புகளைப்பற்றி அறியாதவர்கள். மேற் போக்காகப் பார்க்கிருர்களே தவிர ஆழ்ந்து சிந்திப்ப தில்லை. புராண இதிகாசக் கதைகளிலே சொல்லப்படும் பேருண்மைகளும் அறிவுரைகளும் இன்று நடை பெறும் சில முற்போக்கு நாடகங்களிலேகூடக் காணப் படவில்லையே! மகாகவி காளிதாசன், பவபூதி முதலி யோரின் நாடகங்கள் புராண இதிகாசக் கதைகள் தாம். மேல்நாடுகளில் இன்றும் அந்த நாடகங்களின் சிறப்பைப் போற்றுகிருர்களே! நடித்தும் வருகிருர் களே! காளிதாசனின் சகுந்தலை நாடகம் சந்திர மண்ட லத்தை எட்டிப் பிடித்த ருசியாவிலும் இன்று நடிக்கப் படுகிறதே!.சென்னையில் எந்தத்தேமிழ்ப் படமும் ஓடாத அளவுக்குப்பல வாரங்கள் ஒடிய பத்துக் கட்டளைகள்' என்னும் திரைப் படம் புராணக் கதைதான்.
சிறுத்தொண்டர், அரிச்சந்திரன், மார்க்கண்டேயன் முதலானோரின் புராண வரலாறுகளையும், இராமாயண, மகாபாரதங்களாகிய இதிகாசங்களையும் அடிப்படையாகக் கொண்டு புனையப்படுவன இவ்வகையின. லவகுசா இராமாயண அடிப்படையிலும், கிருஷ்ணன் தூது, கர்ண மோட்சம் என்பன மகாபாரத அடிப்படையிலும் இயற்றப் பட்டனவாகும். இவற்றில் வசனங்கள் பழங்கால நடையினவாக அமைதல் வேண்டும். ஒப்பனைகளும் கற்பனை நிலையில் பல்வேறு அணிகலன்களும் கிரீடங்களும் (மணிமுடி) கொண்டு அமைக்கப்படுதல் மரபு. பாடல்கள் இவற்றில் மிகுதியாகக் காணப்படும். இவை மேடை நாடகங்களில் செல்வாக்குப் பெற்றவை. இயற்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல தெய்வீக நிலையில் இவற்றில் இடம்பெறும். இதற்கேற்ப மேடையமைப்பு ஏற்பாடுகளும் அமையும்.
சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வள்ளி திருமணம், சதி அனுசூயா, பவளக்கொடி, அபிமன்யு, பிரகலாதா முதலான நாடகங்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கனவாகும்.
Search The Blog
புராண இதிகாச நாடகங்கள்
வரலாற்று நாடகங்கள்
அரசர்கள் பற்றிய வரலாற்று நாடகங்கள், அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற புகழ்மிக்க அரசர்களின் வரலாற்றைப் பற்றிச் சான்றாதாரங்கள் வாயிலாகக் கிடைத்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டன.
வரலாற்று நாடகம் வகையான விஷயத்தை உள்ளடக்கத்தை பிரிவின் அடிப்படையில் தியேட்டர் ஒன்றாகும். இது வரலாற்று நிகழ்வுகள் மற்றும் வரலாற்று புள்ளிவிவரங்கள் திறமை அடிப்படையில். மேற்கு, படைப்புகள் இந்த நாடகம், பண்டைய காலத்தில் சேர்ந்தவை. பெயரை பயன்படுத்துவது ஹெகல், அது வேலை, மற்றும் உருவாக்கம் ஒரு முக்கியக் கோட்பாடாக "நம்பிக்கையின் பராமரிப்பு வரலாறு" "ஒரு கடந்தது காலத்தில், வரையப்பட்ட" என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் வரலாற்று தரவு பகுப்பாய்வு, ஆராய்ச்சி ஒரு பெரிய எண் வரலாற்று நாடகம் நாடக தயாரிப்புகளில் படைப்பு கலை செயல்முறை எழுதப்பட்ட வரலாற்று உண்மை இணக்கம் அடிப்படையில் பின்னர் உண்மையான வரலாற்று புள்ளிவிவரங்கள், ஒரு தீம், வரலாற்று நிகழ்வுகள், அடிப்படையில், நாங்கள் திட்டமிடப்பட்டுள்ளது ஒரு பொதுவான உணர்வு தேர்வு நாடக நிகழ்வுகள், மற்றும் கற்பனை, அறிவியல் மற்றும் வரலாற்று நாடகம் பணக்கார மருந்து கொடுக்கவில்லை ஏற்ற பயன்பாட்டை, நாடக மோதல், ஒரு குறிப்பிட்ட வரலாற்று காலகட்டத்தில் வாழ்க்கை சமூக அம்சங்களை இனப்பெருக்கம் ஆகின்றன.
அறிமுகம்
வரலாற்று நாடகம் (வரலாறு நாடகம்) முக்கிய பாத்திரங்கள் மற்றும் நிகழ்ச்சி முக்கிய நிகழ்வு, அதே போல சுற்றுச்சூழல், பழக்க வழக்கங்கள், போன்றவை குவோ போன்ற வரலாற்று உண்மை, கையாளவேண்டும், "க்யூ யுவான்", "Cai Wenji," தியான் ஹேனின் "இளவரசி Wencheng" சாவோ யு தான் "தைரியம் வாள் அத்தியாயம்" முதலியன வரலாற்று நாடகம் நன்கு அறியப்பட்டன.
கலை இன்னும் வாழ்க்கையை விட வாழ்க்கையில் இருந்து வருகிறது. எனவே, வரலாற்று நிகழ்வுகள் மற்றும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் வரலாற்று நாடகம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாதிரியாக இருக்கும்.
கலை படைப்பு நிச்சயமாக, சில முக்கியமாக நாடகம் என அறியப்பட்ட வரலாற்று பிரதிபலிக்கும் உள்ளன, இருந்தன. உதாரணமாக: "யோங் ஜெங் வம்சம்"; விளையாட்டுத்தனமான என்று சில பொழுதுபோக்கு சார்ந்த வரலாற்று நாடகம் உள்ளன. உதாரணமாக: "க்யான் ஜி மறைநிலை பயண", "காங்க் ஜி மறைநிலை சுற்றுலா" மற்றும் பல. எப்படியும் வரலாற்று நாடகம் வரலாற்றில் அழைக்க முடியாது, ஆனால் அது மக்கள் மற்றும் வரலாற்றில் நிகழ்வுகள் சில காரணமாக இருக்கலாம்.
சீனாவில், வரலாற்றுக் காலகட்டத்தில் இருந்து வரையப்பட்ட திறமை படி, யாரோ வரலாற்று நாடகம் தியேட்டர் வகையான இந்த வைக்க வரலாற்று நாடகத்தின் பிரிவுகள் புரட்சிகளினது. பிந்தைய புரட்சி வரையப்பட்ட படைப்புகள் பிறகு புரட்சி நவீன வரலாற்றில் குறிப்பாக குறிக்கிறது, முந்தைய காலத்தில் பட்டியல்களின் நீண்ட வரலாறு முன்னாள் புள்ளி வரையப்பட்டன.
வரலாற்று நாடகம் அளவிற்கு வரலாறு, எப்போதும் சர்ச்சை கோட்பாட்டாளர்கள் ஒரு விஷயமாக உள்ளது என்ன விசுவாசமாக இருக்க வேண்டும். பொதுவாக பேசும், வரலாற்று நாடகம் தியேட்டர் கலை ஒரு வகையான, வேலை தேவையில்லை இயற்கை செயல்முறைகள் ஒட்டிக்கொள்கின்றன மற்றும் விவரம் வரலாற்று நிகழ்வுகள் விவரங்கள், மற்றும் நாடக ஆசிரியர் உருவாக்கம் வரலாற்று புள்ளிவிவரங்கள், செயல்திறன் மற்றும் விளக்கம் பிடியில் கவனம் வைக்கப்படும் தேவைப்படுகிறது. பாத்திரம் மற்றும் ஒலிபரப்பு நம்பகத்தன்மையை வரலாறு, அடிப்படை அளவுகோல் வரலாற்று நாடகம் படைப்புகள் மதிப்பீடு இருக்க வேண்டும், அது நாடக ஆசிரியர் தொடர்ந்து அடிப்படை கொள்கை இருக்க வேண்டும். இந்த கொள்கை நடத்துவதில், நாடக ஆசிரியர், வரலாற்று நிகழ்வுகள், மட்டும் அதன் இயற்கையான போக்கில் மாற்ற முடியும் வழக்கமான, செயலாக்க வடிவமைக்கும் வேண்டும் அடிப்படையில், மற்றும் அறிவியல் மொழிபெயர்க்கப்பட்ட முடியும்.
மூவேந்தர் வரலாறு
இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுச் செய்திகள், வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகள் முதலானவற்றைக் கொண்டு சேர, சோழ, பாண்டியர்கள் வரலாற்றை நாடகங்களாக ஆக்கியிருக்கிறார்கள். உண்மை நிகழ்ச்சிகளுக்கும் இடம் தந்து கற்பனை கலந்து இந்நாடகங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. கலைச்சிறப்பும், கற்பனைச் சுவையும், கருத்துச் செறிவும் கலந்து இவை படைக்கப்பட்டிருக்கின்றன.
சேரர்
சிதம்பர நடராஜ சுந்தரம் என்பார் இளங்கொடியாள் என்னும் நாடகத்தைப் படைத்திருக்கிறார். இந்நாடகம் சேரன் செங்குட்டுவன் கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
சோழர்
ஏ.கே. இராமச்சந்திரன் எழுதிய இளவரசன் குலோத்துங்கன் நாடகம் இலக்கியம், கல்வெட்டு ஆகியவற்றின் அடிப்படையில் படைக்கப்பட்டுள்ளது. அரு.ராமநாதனின் ராஜராஜ சோழன் நாடகம் குறிப்பிடத்தக்கது. இது டி.கே.எஸ். சகோதரர்களால் வெற்றிகரமான நாடகமாக நடிக்கப்பட்டது. இது திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது. எஸ்.பி.மணியின் முடிந்த கோயில் ராஜேந்திர சோழன் வரலாற்றைக் கூறுவதாக உள்ளது. கோவிந்தராஜ் நாட்டாரின் இராசேந்திரன் நாடகமும் இத்தகையதே.
ராஜ ராஜ சோழன்
மாமன்னன் ராஜராஜன் ராஜதந்திரத்தில் சிறந்தவன் என்று காட்டுவதாக நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. மகளின் காதலை ஆதரித்துப் பின்னர் காதலனைச் சிறை செய்வதும், தீயவரை நம்பி நல்லவரைப் புறக்கணிப்பதும் என்று முன்னுக்குப்பின் முரண்பாடான செயல்பாடுகளைக் கொண்டவனாக ராஜராஜ சோழன் படைக்கப்பட்டிருக்கிறான். ஆனால் இறுதியில் இதெல்லாம் ராஜதந்திரம் என்று உணர்த்தும் வகையில் தன் அறிவுத்திறனைப் புலப்படுத்தி அனைவரையும் வியக்க வைக்கிறான்.
முடிந்த கோயில்
இந்நாடகத்தில் ராஜராஜனின் சகோதரி குந்தவை நாச்சியார் அனைவரையும் ஆட்டுவிக்கும் திறனுடைய பெண்மணியாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். குந்தவையின் மகளான இளங்கோப் பிச்சியை இளவரசன் இராசேந்திரன் காதலிப்பதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் இறுதியில் திருமணத்தை நடத்தி வைப்பதாக நாடகம் படைக்கப் பட்டுள்ளது.
பாண்டியர்
ஆர்.சி.தமிழன்பனின் பாண்டிய மகுடம் பாண்டிய இளவரசர்களின் அரசுரிமைப் போரையும், ஒற்றுமையின்மையையும் புலப்படுத்தும் நாடகமாக அமைந்துள்ளது.
நாயக்கர் வரலாறு
விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சி தமிழகத்திலும் விரிவாக்கப்பட்டது. மதுரையிலும், தஞ்சையிலும், நெல்லையிலும் நாயக்கர் ஆட்சி வேரூன்றியது. குறிப்பாக விஸ்வநாதன் என்கிற படைத்தலைவனும், திருமலை நாயக்கனும், ராணி மங்கம்மாளும் வரலாற்றில் போற்றப்படுகிறார்கள். இக்காலக் கட்ட வரலாற்றைப் படைப்பாளர்கள் நாடகங்களாகப் படைத்துள்ளனர். தஞ்சை நாயக்கர் வரலாற்றை விதியின் வலிமை என்ற பெயரில் பி.எஸ்.சுப்பிரமணியம் நாடகமாக்கியுள்ளார்.
விஸ்வநாதம்
விஸ்வநாதனின் வரலாற்றை சி.எஸ்.முத்துசாமி ஐயர் விஸ்வநாதம் என்ற பெயரில் கவிதை நாடகமாக ஆக்கியிருக்கிறார். விஜய நகர மன்னரால் மதுரைக்கு அனுப்பப்பட்ட விசுவ நாதநாயக்கனின் வீரம், காதல் முதலானவை பற்றி நாடகம் விளக்குகிறது. காஞ்சனைக்கும் விசுவநாதனுக்கும் இடையிலான உண்மைக் காதல் உளம் கவரும் வகையில் சித்திரிக்கப் பட்டுள்ளது.
மறைந்த மாநகர்
என்.கனகராஜ ஐயர் படைத்த மறைந்த மாநகர் கிருஷ்ண தேவராயர் காலத்தில், விஜய நகர ஆட்சி பெற்றிருந்த உயர்வையும், இராமராயர் காலத்தில் வீழ்ச்சியுற்றதையும் சித்திரித்துக் காட்டுகிறது. நாடக ஆசிரியர் இதன் வாயிலாக நிலையாமையையும் புலப்படுத்துகிறார்.
ராணி மங்கம்மாள்
கே.எம்.பக்தவத்சலம் படைத்த ராணி மங்கம்மாள் வரலாற்று ஆதாரங்களை மிகுதியாகக் கொண்ட நாடகம். சுத்தானந்த பாரதியார் படைத்த இராணி மங்கம்மாள் நாடகம், அவளது ஆட்சித் திறனை விளக்குவதாக அமைந்துள்ளது. மங்கம்மாள் வரலாற்றைக் கூறுவதாக உள்ளது.
திருமலை நாயக்கர்
ஆறு.அழகப்பன் படைத்த திருமலை நாயக்கர் நாடகம் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் சிறந்தவரான திருமலை நாயக்கரின் வரலாற்றை நுணுக்கமாகக் காட்டுகிறது. அக்காலத்தில் இருந்த குமரகுருபரர், ராபர்ட் டி நொபிலி முதலானவர்கள் பற்றிய வரலாறுகளும் இதில் காட்டப்பட்டுள்ளன. திருமலை நாயக்கரின் ஆட்சி வல்லமை, வீரம், கலை ஆர்வம், மனிதாபிமானம் முதலானவற்றை விளக்குவதாக நாடகம் அமைந்துள்ளது. பாடல்கள், பழமொழிகள் முதலானவற்றுடன் இந்நாடகம் அமைந்துள்ளது.
பிற மன்னர்கள்
வேங்கி நாட்டு அரசுரிமைப் போர் பற்றி ராஜநீதி என்ற நாடகத்தை மக்களன்பன் எழுதியுள்ளார். எஸ்.மகாதேவனின் தெள்ளாற்று நந்தி, அ.ச.ஞானசம்பந்தனின் தெள்ளாறெறிந்த நந்தி, கண்ணன் எழுதிய நந்திவர்மன் முதலானவை பல்லவர் வரலாற்றைக் காட்டும் நாடகங்கள். பி.கே.சுப்பராஜின் வீரபாண்டிய கட்டபொம்மன், கண்ணன் எழுதிய வேங்கை மார்பன், மாலிக்காபூர் முதலானவை நல்ல வரலாற்று நாடகங்கள். தாமரைக் கண்ணனின் சாணக்கிய சாம்ராஜ்யம், சாணக்கியனின் அரசியல் தந்திரங்களையும், சந்திரகுப்தனின் அரசியல் திறமைகளையும் காட்டியது. அரு.ராமநாதனின் சக்கரவர்த்தி அசோகன், மதுரை திருமாறனின் சாணக்கிய சபதம் முதலானவை வடநாட்டு வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள்.
பெரியார்களின் வரலாறு
புகழ் பெற்ற மனிதர்களைப் பற்றிய நாடகங்களையும், வாழ்க்கை வரலாறு போலப் படைத்திருக்கிறார்கள். இவற்றையும் வரலாற்று நாடகங்களாகவே கொள்ள வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரையான செய்திகளும் இவற்றில் இடம்பெறக் கூடும்.
புலவர்கள்
திருவள்ளுவர் வரலாற்றை ஆறு.அழகப்பன் திருவள்ளுவர் என்ற நாடகமாக ஆக்கியுள்ளார். வழித்துணைவன் திருவள்ளுவர் என்ற நாடகத்தின் மூலம் வள்ளுவரைப் பற்றியுள்ள வாழ்க்கைச் செய்திகள், கருத்துகள் அனைத்தையும் அளிக்கின்றார். எத்திராஜ் அவ்வையார் என்ற நாடகத்தைச் சங்க இலக்கியம் மற்றும் புனைகதைகளைக் கொண்டு எழுதியுள்ளார். இன்குலாப் படைத்த ஒளவை பெண்ணிய நோக்கில் எழுதப்பட்டுள்ளது. மு.வரதராசனாரின் இளங்கோ நாடகமும் இத்தகையதே. சி.எஸ்.சச்சிதானந்த தீட்சிதரின் காளிதாசன், சுத்தானந்த பாரதியின் மகாகவி காளிதாசன் நாடகம் முதலானவையும் குறிப்பிடத்தக்கன.
சமயப் பெரியார்கள்
அன்னபூரணி அம்மாளின் சங்கர விஜய விலாசம், ஆதிசங்கரரின் வரலாற்றைக் கூறுகிறது. கிருபானந்த வாரியாரின் ஸ்ரீ அருணகிரி நாத பாவலரின் கபீர்தாசர் நாடகம், திருமலை நல்லானின் மார்கழி நோன்பு அல்லது ஆண்டாள் வரலாறு, மதுரை பத்மனாபனின் வள்ளலார் நாடகம் நாரண துரைக்கண்ணனின் திருவருட்பிரகாச வள்ளலார் முதலானவையும் குறிப்பிடத் தக்கவை.
பல்வகை வரலாறுு
அரசாண்ட மன்னர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கிய கதைகளும், மன்னர்களைப் பற்றிக் கற்பனையுடன் அமைக்கப்பட்ட கதைகளும் நாடகங்களாக இயற்றப்பட்டன. அதைப் போல சாதி, சமயம் முதலியவை பற்றிய வரலாற்று நாடகங்களும் வெளிவந்தன.
வரலாற்றுக் கதை
தெருக்கூத்துகளில் புராணக் கதைகளே இடம் பெற்றன. பின், சில வரலாற்றுக் கதைகளையும் கூத்துகளாக மாற்றி நிகழ்த்தினர். கட்டபொம்மன், மருதுபாண்டியர்கள், ராஜா தேசிங்கு முதலானவர்களின் வரலாறுகள் கூத்துகளில் இடம்பெற்றன. அர்ச்சுனனையும் துரியோதனனையும், இராமனையும் இராவணனையும், முருகனையும் சூரபதுமனையும் கூத்தில் கண்டிருந்த மக்களுக்கு வரலாற்று நாயகர்கள் புதுமையாகத் தோன்றினார்கள்.
கட்டபொம்மு கதை
வரலாற்றுக் கதை, கூத்தாக ஆக்கப்பட்டதற்கு எடுத்துக்காட்டாக அடைக்கல புரம் சிதம்பர சுவாமிகள் இயற்றிய கட்டபொம்மு கூத்து பற்றிக் காண்போம். இதிலுள்ள செய்திகள் புதுமையாகத் தோன்றின. கட்டபொம்மனின் உரிமை உணர்வு கூத்தில் புலப்படுத்தப்பட்டது. வரலாற்று அடிப்படையில் இருந்த கூத்துகள் நாடகங்களாக ஆக்கப்பட்டன.
சாதி நாடகங்கள்
வரலாற்றுக் கூத்துகள் நாடகமாக்கப் பட்டதைத் தொடர்ந்து பல நாடகங்கள் வெளியாயின. சோகி நாடகம், கார்காத்த நாடகம், தட்ட நாடகம் என்று சாதி பற்றிய வரலாற்று நாடகங்கள் எழுந்தன.
இசுலாமிய நாடகங்கள்
முகமது இபுராகிம் அவர்களின் அப்பாசு நாடகம், வண்ணக்களஞ்சியப் புலவரின் அலிபாதுஷா நாடகம், தையார்சுல்தான் நாடகம் முதலான இசுலாமிய நாடகங்கள் வெளியாயின.
கிறித்தவ நாடகங்கள்
ஞான சௌந்தரி நாடகம், வேதநாயகம் பிள்ளை வாசகப்பா முதலான கிறித்துவ நாடகங்களும் வெளியாயின.
கணினித் தமிழ்
கணினி ஒரு மின்னனு சாதனமாகும். இது இயந்திர மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றது. இவ்வியந்திர மொழி அடிமான எண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. (0 மற்றும் 1) மையச்செயலகம்(CPU) எனும் செயலக அமைப்பு, இந்த இயந்திர மொழியால் மட்டுமே இயங்கக்கூடியது.
கணினியில் தமிழ் தோன்றியது 1980 காலப்பகுதியிலேயே. இக்காலப் பகுதியில் தான் தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக் கணினிகள் (personal desktop computers) விற்பனைக்கு விடப்பட்டன. பல வியாபார நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத் தயாரித்து வெளியிட்டு சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான இயக்கு தளங்களைக் (Operating system) கொண்டிருந்தன. பின்னர் மக் ஓ.ஸ். (MacOS), மைக்ரோசாப்ட் (Microsoft DOS), ஓ.எஸ்.2 (OS2) வகை இயக்கு தளமுடைய கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ்வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளிவந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி வல்லுநர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர்.
கணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளையும் (operation commands) மறுமொழிகளையும் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என்று பலதரப்பட்ட சிறப்புப் பாவனைப் பொருட்களும் கணினியின் திறமையைப் பாவித்து சிறப்பாக இயங்குமாறு ஆங்கில மூல மென்பொருட்கள் பக்கச் சேர்ப்பாக உருவாக்கம் பெற்றன. இம் மென்பொருட்கள் மக்களின் பல தேவைகளை மிக எளிதாகச் செய்து முடிக்கப் பெரும் உதவியாக அமைந்தன.
தமிழில் முதல் மென்பொருள்:
இவற்றின் பயன்களைத் தமிழிலும் பெற முயன்றனர் தமிழ்க் கணினி வல்லுநர்கள். இம் முயற்சிகளின் பலனாக முதலில் தோன்றிய மென்பொருட்களில் ஓர் ஆவணங்கள் எழுதும் ஆதமி (Adami) என்பதும் ஒன்றாகும். இது 1984 இல் கனடாவில் வாழும் முனைவர் ஸ்ரீநிவாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். இது அக்காலத்தைய IBM DOS 2.x இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக “ஆதவின்” என்ற மென்பொருளும் MS Windows இயங்கு தளத்தில் பயன்படக் கூடியதாக பின்னாளில் உருவாக்கம் பெற்றது. இம் மென்பொருட்கள் அந் நாளில் தமிழ்க் கணினிப் பயனாளர்களிடம் பிரபலமாக இருந்தன. இதே நேரத்தில் தோன்றிய இன்னொரு மென்பொருள் பாரதி என்பதாகும். இது சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பிரபலமாக இருந்தன.
தமிழ் எழுத்துருக்கள் அறிமுகம்:
80 களின் பிற்பகுதியில் திரு. அர்த்தனாரி (Mr. T. S. Arthanari) ஒரு தமிழ் எழுத்துருவை உருவாக்கியதாக அறியப்படுகிறது ஆனால் மேலதிக விபரங்கள் பெற முடியவில்லை.
1990 களின் முற்பகுதியில் “மக்கின்டாஸ்” கணினியில் தமிழ் எழுத்துரு (Tamil Fonts) அறிமுகப் படுத்தப் பட்டது. ஆதமி(1984) உருவாகும் முன்னர் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் ஆப்பிள் கணினியில் தமிழ் எழுத்துருக்களை அறிமுகப் படுத்தியிருந்தார். இதே நேரத்தில் யூனிக்சு (UNIX) இயங்கு தளத்திலும் முதன் முதலாக முனைவர் பால சுவாமிநாதன் அவர்களும் அவர்தம் உடன்பிறந்தார் முனைவர் ஞானசேகர் அவர்களும் யூனிக்சில் தமிழுருக்கள் ஆக்கினர். அத்தோடு LaTex எழுதியில் பாவிக்க wntamil என்னும் எழுத்துரு முறை அறிமுகப் படுத்தப்பட்டது. ஐ-ட்ரான்ஸ் (iTrans) என்ற நிறுவனமும் யூனிக்சில் தமிழில் எழுத வசதியாக எழுத்துருக்களையும், உதவிகளையும் வழங்கியிருந்தது. இந்த எழுத்துருக்களை கணினியில் அடிக்க எழுத்துப்பெயர்ப்பு (transliteration) முறையே பாவிக்கப் பட்டது. அதாவது அம்மா என்பதை ammaa என்று கணினியின் விசைப்பலகையில் அடிக்க வேண்டும். எழுத்துருக்கள் உருவாக்கமும் எழுதும் முறையும் இலகுவாக இருக்க, கணினிகளில் மேலதிக மென்பொருள் தேவையின்றியே தமிழில் எழுத முடிந்தது. இக்கால கட்டத்தில் பல எழுத்துருக்களை பல வல்லுனர்கள் உருவாக்கத் தொடங்கினர். இதன் பயனாகப் பல எழுத்துருக்கள் கணினிகளிற் பாவனைக்கு வந்து கொண்டிருந்தன. இவ் வெழுத்துருக்களில் கனடாவில் வாழும் முனைவர் விஜயகுமார் அவர்கள் ஆக்கிய நூற்றுக்கணக்கான எழுத்துருக்கள் குறிப்பிடத்தக்கன. இவ்வெழுத்துருக்களுக்கு கருநாடக இசை இராகங்களின் பெயர்களை இட்டிருந்தார். முனைவர் பெ குப்புசாமி அவர்கள் ஆக்கி கல்வி என்னும் பயன்மென்பொருட்களுக்குப் பயன்படுத்திய எழுத்துருக்களும், முனைவர் கல்யாணசுந்தரம் அவர்கள் ஆக்கிய மைலை (Mylai)யும், பாமினி (Bamini) போன்றவையும் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தன. இந்த எழுத்துருக்களின் தோற்றங்களாற் பல நன்மைகள் ஏற்படலாயின. எழுத்துருக்களை வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஆங்கில மூலம் கிடைக்கும் எழுத்துக்கோர்ப்பு, கணிக்கும் அட்டவணை ஆக்கி (Word, Excel) ஆகிய மென்பொருட்களைத் தமிழில் பாவிக்க முடிந்தது. ஆதமி போல ஒரு தமிழ் மென்பொருள் உருவாகத்திற்கான தேவைகள் குறைந்தன.
விசைப் பலகைச் சிக்கல்கள்:
எழுத்துருவின் பாவனையிலிருந்த ஒரு பெரிய சிக்கல் எழுத்துக்களை அடிக்கத் தேவையான விசைப்பலகை (keyboard) தான். கணினியில் இருக்கும் விசைப் பலகை பெரும்பாலும் ஆங்கில மொழிக்குரியது. தமிழ் எழுத்துருக்கள் தமிழ்த் தட்டச்சு இயந்திரத்தின் விசைப் பலகையினை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டவை. தமிழ்த் தட்டச்சுத் தெரிந்திருந்தவர்களுக்கு மென்பொருட்களைத் தமிழ் எழுத்துரு மூலம் பயன்படுத்துவது இலகுவாக இருந்தது. இதனால் இந்த எழுத்துருக்கள் தமிழர் தாயகங்களில் பரவலாக அறியப்பட்டன. அங்கே இருந்த கணினி வல்லுநர்கள், பத்திரிக்கைகள், இதழ்கள் அல்லது சஞ்சிகைகள் போன்றவற்றை நடத்தும் எல்லோரும் தங்களுக்கென அழகழகாகப் பல எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டனர். தமிழ்த் தட்டச்சுத் தெரியாதவர்கள் நத்தை வேகத்தில் தான் இதைப் பயன்படுத்த முடிந்தது.
பொதுத் தரம் இல்லா எழுத்துருக்கள்:
இப்படி உருவான எழுத்துருக்களினால் இன்னொரு சிக்கலும் இருந்தது. அதாவது, எழுத்துரு உருவாக்குபவர்கள் எந்த ஒரு தகுதரத்தையும் (standards) கடைப்பிடிக்கவிலை. தரங்கள் ஏதும் வகுக்கப் படவில்லை. வெவ்வேறு எழுத்துருக்கள் வெவ்வேறு தனி முறைகளைக் கொண்டிருந்தன. இதனால், இந்த எழுத்துருக்கள் எல்லா வகையான ஆங்கிலமூல மென்பொருட்களிலும் நூறு விழுக்காடு (வீதம்) சரியாக ஒத்தியங்கவில்லை. சில சமயங்களில், சில மென்பொருட்களிலிலும் சங்கடங்கள் இருந்தன. ஆனாலும் அடிப்படைப் பயன்பாடுகளான எழுதி, கணக்குப் பதிவுகள் போன்ற தேவைகள் அப்போது தமிழில் நிறைவேற்றக் கூடியதாக இருந்தன.
அறிவியல் தமிழ் இலக்கியம்
தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் கல்வி, ஆய்வுகள், தகவல் பரிமாற்றம், பிற அறிவியல் புலமைசார் செயற்பாடுகளை முதன்மையாகக் குறிக்கின்றது. இங்கு அறிவியல் தமிழ் மொழியையும், தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் தொடர்பான செயற்பாடுகளையும் ஒருங்கே சுட்டுகின்றது.
தமிழ் மொழியில், தமிழர் இடையே அறிவியல் செயற்பாடுகள் தொன்று தொட்டு பல காலகட்டங்களில் சிறப்புற்று இருந்தாலும் அறிவியல் தமிழ் இக்காலத்தில் மேற்கே செம்மை பெற்ற அறிவியல் அணுகுமுறைகளை உள்வாங்கி தமிழில், தமிழ்ச்சூழலில் மேற்கொள்ளப்படும் அறிவியல் செயற்பாடுகளை சிறப்பாக குறிக்கின்றது.
அறிவியல் என்பது தனிப்பட்ட மனிதருக்கோ நாட்டிற்கோ உரியதன்று. அது உலகம் முழுமைக்கும் பொதுவானது. அறிவியலின் பயன்களைப் படித்தவர், படிக்காதவர் என்னும் வேற்றுமையின்றி அனைவரும் துய்க்கின்றனர். மெல்ல மெல்ல வேரூன்றிய அறிவியல் வளர்ச்சி இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் விரிந்து பரந்துள்ளது. அறிவியலுக்கு மொழிக் கட்டுப்பாடு இல்லை. அதன் எல்லையற்ற சாதனைகளுக்கு மொழி தடையாக இல்லாமல் கருவியாக மட்டுமே இயங்கி வந்துள்ளது. பல்வேறு தொடர்புக் கருவிகளால் சுருங்கிவிட்ட உலகின் ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்படும் புதுமைகளையும் பிற அறிவியல் சார்ந்த, சாராத உண்மைகளையும் ஒவ்வொருவரும், குறிப்பாக மாணவர்கள் அறிதல் இன்றியமையாதது. இந்த அறிவுப் புரட்சியில் மொழியும் தன்னை ஈடுபடுத்தி வளப்படுத்திக் கொள்வதால் பிற நாட்டவரோடு போட்டியிடும் தகுதியையும் பெறுகிறது.
உலகத்தோடு ஒட்டி வாழ வேண்டியுள்ள நமக்குத் தாய்மொழிவழிக் கல்வி பெரிதும் பயனளிக்கும். பிற மொழியில் பயிலும் போது, அம்மொழியின் கருத்துக்களைத் தம் மொழிக் குறிப்புகளாக மாற்றிச் சிந்திப்பதைத் தத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தாய்மொழியில் பயின்று அதனால் கிடைக்கும் அறிவின் மூலம் விளையும் சிந்தனைகளே சிறப்பானவையாக விளங்கும் என்பதை வரலாற்று உண்மைகள் உணர்த்துகின்றன. வாழ்வியல், அறிவியல் ஆகிய இரு பெரும் பிரிவுகளிலும் இதற்கான சான்றுகள் மிகுந்துள்ளன. ஏட்டறிவு பெறாதோரும் தத்தம் மொழியில் வழங்கப்படும் பிற குறிப்புகளை எளிதில் புரிந்து கொள்கினறனர். எனவே, வாழ்க்கையோடு இணைந்துவிட்ட தாய்மொழியில் பயில்வதும், கற்பிப்பதும் சிறப்பான விளைவுகளை உண்டாக்கும் என்பது கண்கூடு. இவ்வுலகின் வளர்ச்சியடைந்த நாடுகளைச் சான்றாகக் கொண்டால் அந்நாடுகளிலெல்லாம் தாய் மொழிவழியே அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப் பட்டு வருவதைக் காணலாம். இங்கிலாந்தின் ஆதிக்கம் உலகின் பல நாடுகளில் பரவியிருந்தமையால் அது மிகப்பெரும்பாலோரால் பேசப்படும் மொழியாகவும் இணைப்பு மொழியாகவும் உள்ளது. உலகக் கண்டுபிடிப்புகளின் தகவல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உடனடியாகக் கிடைக்கின்றன. பிற நாடுகளில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளை சீனாவில் அவர்கள் மொழியில் மொழிபெயர்த்துத் தகவல்களை உடனுக்குடன் பரிமாற்றம் செய்கின்றனர். இதனால் மொழி என்பது அறிவியலைப் பொருத்தவரை தொடர்பு ஊடகமாகவே செயல்படுகிறது. அந்தத் தொடர்பு ஊடகம் தாய்மொழியாக இருப்பின் கற்பதும் கற்பிப்பதும் எளிதாக அமையும்.
அடிப்படை அறிவியல் கருத்துகளைக் கொண்டு தன் முயற்சியால் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள, வலுவான அடித்தளமும், தெளிவான சிந்தனையும் தேவை. சிந்தனயில் தெளிவு இல்லாவிடில் புதிய கருத்துகளை உருவாக்கவோ, செயல்படுத்தவோ இயலாது. பத்து பக்கப் பாடத்தைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியை 10 நிமிட செய்முறைப் பயிற்சி மூலம் அறிமுகப்படுத்திவிடலாம். ஏட்டளவில் உள்ள செய்திகளை நேருக்கு நேர் செய்முறைப் பயிற்சி அளிப்பதன் மூலம் மனதில் ஆழமாகப் பதியவைப்பதும், அந்தப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு தாமே பிற பயிற்சிகளுக்கு முயலுவதும் ஆகும். இந்நிலையில் நூல் வழிக் கல்வி, அறிமுறைக்கல்வி ஆகியவற்றை நம் தாய் மொழியாம் தமிழ் வழியாகக் கற்பிப்பதால் மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன் உயரும் எனலாம்.
தமிழைப் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வாழ்வியல், அறிவியல் பாடங்கள் தமிழ் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையில் கற்பிக்கப்படுகின்றன. அரசுக் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி வழங்கப்படுகின்றது. ஆனாலும் தாய்மொழிவழிக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மேல்நிலைப் பள்ளி வரையில் பெரும்பான்மையாக இருக்கும்போது உயர் கல்வி நிறுவனங்களான கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் குறைவாகவே இருக்கின்றன. ஆங்கிலப் பயிற்று மொழி வழிப் பட்டத்தைப் பெறும் மாணவர்கள் ஆங்கிலத்திலோ பிற பாடத்திலோ தெளிவு பெற்றுள்ளனரா என்றால் அதுவுமில்லை. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல் அங்கேயும் இங்கேயும் அரைகுறைதான். இது அறிவில் கூறுகளையும் கருத்துக்களையும் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் நெட்டுரு செய்வதனால் ஏற்படும் தேக்க நிலையாகும். இதனால் சிந்தனைத் தெளிவு ஏற்படாது. குறிப்பிட்ட பாடத்தின் உண்மைகளைப் பிழையறக் கற்றிருந்தால் மட்டுமே இதனைச் செய்ய இயலும். இயல்பாகவே வீட்டுமொழியாகவும், வாழ்க்கை மொழியாகவும் இருக்கும் தமிழ் வழிக் கல்வி விரைவாகப் புரிந்து கொள்வதற்கும் அதன்வழி சிந்திப்பதற்கும் பெரிதும் துணைபுரிகின்றன.
மேலும் ஒருவர் கல்லூரியில் படிக்கும் கல்விக்கும் அவர் பணியமர்த்தப்படும் வேலைக்கும் சிறிதும் தொடர்பிருப்பதில்லை. அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்று விட்டு வங்கி, பிற அரசு, தனியார் நிறுவனங்களில் எழுத்தர்களாகவும், தட்டச்சர்களாகவும் மேலாளர்களாகவும் பணியாற்றுகின்றனர். ஆகவே, அவர் அறிவியல் பாடத்தில் பெற்ற பயிற்சியும், கல்வியும் அவர் பட்டம் பெறுவதற்காகத் தனிப்பட்ட முறையில் செலவு செய்த பணமும், அவருக்காக அரசு செலவிட்ட பணமும் வீணாகின்றன. வங்கிகளில் பணியாற்ற அதற்கென பட்டப் படிப்புகள் தனியே உள்ளன. எனவே, வாழ்வியல், அறிவியல் பிரிவுகளில் பயில்வோருக்குமிடையே எந்த வேறுபாடும் இருப்பதில்லை. இதனைத் தவிர்க்க அறிவியல் சார்புடைய மிகுதியான நிறுவனங்களை அரசும், தனியாரும் நிறுவ வேண்டும். அறிவியல் ஆய்வுகள் பிறநாடுகளுடன் போட்டியிட்டு நடைபெறுவதற்கும், தமிழில் அறிவியல் பாடங்களை மாணவர்கள் கற்பதற்கும் ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது அறிவியல் ஆய்வு இதழ்களை வெளியிடுதல், மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த பொழுதுபோக்கு அறிவியல் படக் கதைப் புத்தகங்கள் வெளியிடுதல், அறிவியல் ஆண்டு விழா நடத்துதல், அறிவியல் மன்றங்கள் ஏற்படுத்துதல், ஒலி, ஒளி நாடகங்கள் மூலம் அறிவியல் கருத்துக்களைப் பரப்புதல் ஆகியன பெரிதும் துணைபுரியும். தற்போது பிற கலைத் தொடர்பாக வெளியிடப்படும், வார மாத இதழ்களை ஒப்பு நோக்கும் போது, அறிவியலில் வெளிவரும் இதழ்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஹெல்த் துளிர், விஞ்ஞானச்சுடர், கலைக்கதிர், கால்நடைக் கதிர், உங்கள் உடல்நலம், விஞ்ஞானச் சிறகு, வளரும் வேளாண்மை போன்ற குறிப்பிட்ட இதழ்களே அறிவியல் பரப்பும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இவ்விதழ்களின் வாசகர்கள் மிகக் குறைவு. இவை போன்ற பிற அறிவியல் ஏடுகளை சேவையாகக் கருதி பல்கலைக் கழகங்கள் வெளியிட முன்வரவேண்டும். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் குறிப்பிட்ட அறிவியல் துறைகளில் ஆய்விதழ்களின் சுருக்கங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகின்றனர். இதே போல் அறிவியல் துறைகள் அனைத்திலும் நிகழும் செய்திகளை மாணவர்களுக்கு உடனுக்குடன் வழங்கவும், அச் செய்திகளைப் பாதுகாக்கவும், ஒரு தனி அமைப்பை நிறுவ வேண்டியது மிக இன்றியமையாததாகும்.
ஜப்பான் உள்ளிட்ட பல வளர்ச்சியடைந்த நாடுகளில், ஆங்கில மொழியில் வெளியான அனைத்து ஆய்வுக் கட்டுரைகளையும், தாய்மொழியில் மொழி பெயர்த்து ஆய்வாளர்களுக்கு வழங்கிவிடுகின்றனர். இதனால ஆய்வுத் தேக்கநிலை ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போய்விடுகின்றது. தமிழிலும் இவ்வாறு செய்யலாம். தொடக்கத்தில் கலைச்சொற்களை மொழிப்பெயர்ப்பதில் சிக்கல்கள் எழலாம். ஒவ்வொரு அறிவியல் பிரிவிற்கும் தனித்தனிக் குழுவினரை நியமதித்து, தற்போது வழக்கில் உள்ள சொற்களையும், புதிதாக உருவாக்கப்படும் சொற்களையும் ஆராய்ந்து ஏற்புடையவற்றை ஏற்று அவற்றையே அனைவரும் பயன்படுத்த ஆணையிட வேண்டும். தொடக்கத்தில் சில இடர்பாடுகள் நேரிடினும் நாளடைவில் சீரும் செம்மையும் பெற்றுவிடும்.
அரசு, எவ்வழி, மக்கள் அவ்வழி என்பார்கள். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து அறிவியல் பிரிவுகளிலும் தமிழைப் பயிற்று மொழியாக, பயிற்சி மொழியாகச் செயல்படுத்த அரசு ஆவண செய்ய வேண்டும். இது எளிதில் இயலுமா என வினவுவோர்க்கு நாம் அளிக்கும் பதில் ‘ஆம் முடியும்’ என்பதே. ஒரு சிறிய உத்தரவின் மூலமே இம்மாபெரும் சீர்திருத்ததத்தைச் எளிதாக மேற்கொள்ள முடியும்.
தமிழ் வழியாகக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் அறிவியல் பயிற்றுவிக்கப்படும்போது அதில் பயிலும் மாணவர்கள் வேலைவாய்ப்பு தேடிப் பிற இடங்களுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்படும். உடனுக்குடன் கிடைக்கப் பெறயியலாத நிலையில் இவர்களின் அறிவு வளர்ச்சி பாதிக்கப்படும் எனச் சிலர் வாதிடுகின்றனர். இக்கூற்றில் உண்மை இருப்பதாகத் தோன்றவில்லை. ஏனெனில் நாம் ஆங்கிலத்தையோ, பிற மொழிகளையோ கற்பதைத் தடை செய்யவில்லை 'ஒரு மொழி என்ற அளவில்'. ஆனால் அதில் படித்தால் தான் நன்கு கற்க முடியும்; ஆராய இயலும் என்பதையே மறுக்கிறோம். மேற்சொன்ன கூற்றில் உண்மை இருக்குமெனில் நம் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் படித்தோரின் எண்ணிக்கைக்கும் இந்திய அறிவியல், பொருளாதார அறிவு ஆய்விற்கும் தொடர்பின்றிப் போகுமா? ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான பட்டதாரிகளை உருவாக்கும் நாட்டில் ஏராளமான ஆய்வுகளும் போட்டியிடும் அளவுக்கு உண்டாயிருக்க வேண்டும். ஆனால் இங்கு நிலைமையே வேறு. நாம் வெறும் பட்டதாரிகளை அதாவது தொடர்பில்லாத பணிக்குரிய கல்வியைத் தான் கற்றுக் கொடுத்து வருகிறோம். எனவே, கல்வியையும் வேலை வாய்ப்பினையும் தகுந்த முறையில் தொடர்பு படுத்த வேண்டும்.
இந்நாளில் கணிப்பொறி நுழையாத துறையே இல்லை எனலாம். எதிர்வரும் காலத்தில் கணிப்பொறி இல்லாமல் எந்தவொரு பிரிவும் செயல்பட இயலாத நிலைகூட ஏற்படலாம். கணிப்பொறியைப் பயன்படுத்தித் தமிழ் மொழி வழிக் கல்வியைக் குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில் முறையில் பாடங்களைப் படிப்பதற்கு மாணவர்களிடயே ஆர்வத்தை ஏற்படுத்த முறையான பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்த வேண்டும். தெளிவான தொலைநோக்கு, வலுவான அடிப்படைக் கல்வி, முறையான அறிமுறைப் பயிற்சி ஆகியவை மனித வள மேம்பாட்டிற்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் சிறப்பாகத் தேவைப்படுவன. நர்சரிப் பள்ளிகளும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் பெருகிவரும் இந்நாளில் தமிழில் அறிவியல் உட்பட அனைத்தும் என்னும் முழக்கம் ஓங்கி ஒலிக்க வேண்டிய தேவை இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
ஆராய்ச்சிக் கட்டுரை
ஆய்வு என்பது 'ஆய்தல்'. பகுத்துப் பார்த்தல். ஆராய்தல் என்று பொருள். அதாவது நாம் விரும்பும் ஏதோவொன்று சார்ந்து நமக்கு 'எழும்' ஐயம் குறித்துச் செய்வதே ஆய்வு. எனவே முன்முடிவுகள் ( Prejudice ) கொண்டு ஆய்வைத் துவங்க முடியாது. அறிந்துகொள்ள முற்படுவதே ஆய்வு.ஆய்வு என்பது அறிவு சார்ந்தே தவிர உணர்வு சார்ந்து இருத்தலாகாது.
ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை:
தங்கள் ஆராய்ச்சியின் நோக்கம் மற்றும் நன்மைகளை விவாதிக்க வேண்டும். Methods : தங்களது செய்முறை, பயன்படுத்த கருவிகள், ரசாயனங்கள், நேரம், காலம், அளவு, செறிவு என அனைத்தையும் சுருக்கமாக எழுத வேண்டும். எழுத்து நடை : தங்களது செய்முறையை விவாதித்தலில் Past tense ல் Passive Voice ஆக இருக்க வேண்டும்.
- உண்மைத்தன்மையை நோக்கிய பயணமாக இருக்கவேண்டும் ( Towards truth ). நமது நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளத் தேவை இல்லை , ஆனால் உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இருத்தல் வேண்டும்.
- நாம் இன்று ஆராய்ந்து சொல்லும் ஒரு விஷயம் நாளை வேறொருவரால் , காலத்தால் , அதிநவீனக் கருவிகளால் தாண்டிச் செல்லப்படும் என்பதையும் உணர வேண்டும். There is no absolute truth.
- நமக்கு முன்னர்ச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளைக் கவனமாகப் புரிந்துகொள்ளவேண்டும். நல்ல நூல்கள் பல கற்றறிந்திருத்தல் வேண்டும்.
- மனித குலத்திற்கும் இயற்கைக்கும் நன்மை விளைவிக்க வேண்டும்.
- அறிவு சார்ந்து நிரூபிக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். Scientific Approach
- எல்லாவற்றுக்கும் மேலாக நேர்மையும் அறமும் ( Righteousness ) இருத்தல் வேண்டும்.
இவையனைத்தையும் உணர்த்தும் விதமாக 'ஆய்வுக்கட்டுரை' இருத்தல் வேண்டும்.
ஆராய்ச்சி கட்டுரைகளின் வகைகள்:
ஆராய்ச்சி கட்டுரைகள் பலவகைகள் உண்டு. இவைகள் ஆராய்ச்சி கட்டுரையின் நீளம் மற்றும் வடிவத்தை பொறுத்தது.
Communication : நீங்கள் ஆராய்ச்சியில் ஆரம்ப புள்ளியை முடித்துள்ளீர், தொடர்ந்து செய்வேன். மற்றவர் வெளியிடும் முன்னர் நான் இந்த துறையில் வேலை செய்கிறேன் என்பதனை காட்டும் விதமாக ஆராய்ச்சி கட்டுரை எழுதுதல். இதனை Communication என்பர், இதன் மொத்த நீளம் 4 பக்கங்கள்.
Letter : இது அடுத்த கட்டம், பாதி ஆராய்ச்சியை முடித்துள்ளீர், மீதியை செய்து கொண்டிருக்கிரீர்கள், இதனை Letter வடிவில் வெளியிடலாம். இவை 4- 8 பக்கங்கள் வரை எழுதலாம்.
Full article : இவை முழுவதும் முடித்த ஆராய்ச்சி, 8 - 32 பக்கங்கள் அல்லது அதற்கும் மேலாக கூட எழுதலாம்.
Review article : இது ஆராய்ச்சி கட்டுரை அல்ல, மற்ற ஆராய்ச்சிகளின் தொகுப்பு கட்டுரை, பக்கங்களுக்கான வரையறை இல்லை.
இது மட்டுமில்லாமல் Short communication, Emerged article, Extensive letter என பல்வேறு வகைகள் உண்டு.
ஒரு ஆராய்ச்சி எப்போது முடியும் என கணிக்க முடியாது, சில நேரங்களில் 10 ஆண்டுகள் அதற்கு மேலாக கூட எடுக்கும். நம்மை போன்றே வேறு யாராவது அதனை ஆராய்ச்சி செய்து நமக்கு முன்னர் வெளியிட்டால் நாம் செய்ய அனைத்தும் வீணாகிவிடும். இந்த மாதிரி சம்பவங்கள் நிறைய நடக்கும். இதனை தவிர்க்கவே அவ்வப்போது கட்டுரை வெளியிடுதல் அவசியமாகும்.
கல்வி ஆய்வுக்கட்டுரையை எழுதுவதற்கான அவசியமான படிமுறைகள்
ஆய்வுக்கட்டுரை என்பது ஒருவர் மேற்கொண்ட ஆராய்ச்சியினைப் பற்றிய விரிவான எழுத்தறிக்கை. அதன் மூலமே அந்தத் துறை சார்ந்த அறிஞர்கள் அல்லது சாமானிய மக்கள் மத்தியில் ஆதாரத்துடன் தன் ஆராய்ச்சியினை நிகழ்த்திக் காட்டி அங்கீகாரம் பெற முடியும்.
- திட்டவரை
முதலில் நம் ஆராய்ச்சிக்கான கருப்பொருட்கள், அவற்றுக்குத் தேவைப்பட்ட வழிமுறைகள், பொருட்கள் மற்றும் அதற்கான ஆதாரங்களை பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும்.
- அமைப்பமறையை தெரிந்துகொள்ளுதல்
கல்வி ஆய்வுக்கட்டுரையை முன்மொழிவதற்கான கூறுகளை, அதை வகுப்பதற்கான படிநிலைகளாக எழுத வேண்டும்.
1. ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்
-
ஆராய்ச்சிக்கான காரணம் மற்றும் ஆராய்ச்சியின் பயன்களை சுருக்கமாகச் சொல்ல வேண்டும்
-
எந்த நடைமுறை பிரச்சனை அல்லது இடர்களை சரி செய்யும் விதமாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது என்பதை எளிமையாக புரியும் வண்ணம் விளக்கியிருக்க வேண்டும்
2. முன்னுரை-
தொடக்கத்தில் எந்த மாதிரியாக பிரச்சனைகளை கையாண்டு, இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டது என்பதையும், எந்தத் துறை அடிப்படையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது என்பதையும் விளக்கியிருக்க வேண்டும்
-
முழு ஆய்வுக்கட்டுரைக்கும் ஆதாராப்புள்ளியாக அமைந்தவற்றைப் பற்றி கூறியிருக்க வேண்டும்
3. முந்தைய ஆய்வுத்தொகுப்புை-
இதற்கு முன் யாராவது மேற்கொண்ட ஆராய்ச்சிகளை ஒருவர் அடிப்படையாக எடுத்துக்கொண்டால், அந்தத் ஆராய்ச்சியினால் ஒருவர் பயன்படுத்திக் கொண்ட முறைகள் மற்றும் அதிலிருந்து மேம்பட்டவைகளை எடுத்துரைக்க வேண்டும்
4.ஆய்வின் காரணம்-
ஆய்வின் காரணத்தை விரிவாக விளக்கி, இந்த ஆய்வின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைத்ததா, என்பதையும் கூற வேண்டும்
5. அணுகுமுறை-
முறைகள்
எந்தெந்த முறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதோ, அதன் வழியே ஈட்டிய பலனைப் பற்றி விளக்க வேண்டும்
எத்தனை முறைகளை எவ்வாறெல்லாம் கையாண்டுள்ளோம் என்பதை விளக்க வேண்டும் -
மூல நூற்பட்டியல்
நம் ஆராய்ச்சியினைப் பற்றிய சந்தேகங்களைத் தீர்க்கவும், சில முறைகளைப் பற்றிய தெளிவான அறிவும் கிடைக்கப்பெற்ற நூற்பட்டியலை இணைக்க வேண்டும்
ஆய்வுக்கட்டுரை இயற்றிவர்களின் பெயர்கள், நூலின் பெயர், இடம், வெளியீட்டாளர், வெளியிட்ட ஆண்டு, எந்த ஊடகத்தின் வழியே வெளியிடப்பட்டது என்ற விவரங்களை எல்லாம் இணைக்க வேண்டும்
6. சாத்தியமாகும் பலன்கள்ை-
இந்த ஆய்வின் வழியே சாத்தியமாகும் பலன்களைப் பற்றிய விரிவான விளக்கம் தர வேண்டும்
-
கணக்கீடுகள், விளக்கப்படம், வரைபடம், சமன்பாடு போன்றவை தேவைபட்டால் அவற்றையும் இணைக்க வேண்டும்
7. வரம்புகள்-
இந்த ஆய்வு சில இடர்களைக் களைந்து, ஒரு நோக்கத்திற்கு உதவினாலும், இந்த ஆய்வின் நடைமுறை சிக்கல்கள், சவால்களைப் பற்றி விளக்க வேண்டும். உதாரணமாக, சூரிய ஒளியினைப் பயன்படுத்தும் ஆராய்ச்சி என்றால், இதை கோடைகாலத்தில் மட்டுமே ஆற்றல்மிக்கதாக பயன்படுத்த முடியும் என்பது போல இந்த ஆய்வு நல்ல முறையில் வெற்றிபெற தடை போடும் சில சிக்கல்களை கண்டறிந்து விளக்க வேண்டும்
8. பங்களிப்புகள்-
ஏற்கனவே இருக்கும் தொழிற்நுட்பமும், கண்டறிந்த நுட்பமும் போக இந்த ஆராய்ச்சியின் மூலம் நமக்குக் கிடைத்த புதுமையான கோணங்களை விளக்க வேண்டும்
-
ஒருவர் யாருடைய துணையுமின்றி தானே கண்டறிந்தவற்றைப் பற்றிய விளக்கங்களை எழுத வேண்டும்
9. முன்மொழியப்பட்ட விளக்கவுரை-
நம் ஆராய்ச்சியின் ஆதாரங்களை சரியாக பகுப்பாய்ந்து அவற்றை சரியான தலைப்புகளுடன் பொருத்தி விளக்கியிருக்க வேண்டும்
-
அந்த விளக்கங்கள் எளியவருக்கும் துறைசார் அறிவும் இல்லாதவர்களுக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டும்
10. முடிவுரை-
இறுதியாக இந்த ஆய்வின் முழுமுதற் பலன் கிடைத்தால், அது எவ்வாறு பயன் தரும், யாருக்கு எந்த சூழ்நிலையில் பயன்தரும் என்பதையும் கூற வேண்டும். அதை எளிய முறையில் விளக்கி முற்று பெறச் செய்ய வேண்டும்
-
- எழுத்துக்கான திட்டமிடல்
ஆய்வினை எழுத்து மூலமாக ஒருவருக்கு எவ்வாறு புரிய வைப்பது என்பதை சரியாக திட்டமிட்டு, முறையான தலைப்புகளும், அந்த தலைப்புகளை நியாயப்படுத்தும் விதமாக கட்டுரையை இயற்ற வேண்டும்
ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு படியாக ஆய்வினை விளக்கும் படி இருக்க வேண்டும், முழுவதுமாக எந்த முறையும் இல்லாமல் வெறுமென விளக்கியிருந்தால், அவற்றை படித்து உறுதி செய்பவர் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்
திட்டமிட்டு எழுதி முடித்ததும், அனைத்தையும் மீண்டும் வாசித்து பிழைகளை சரிசெய்ய வேண்டும், சீரமைப்பு தேவைப்பட்டால் அதையும் செய்ய வேண்டும்
- ஆதாரப்பூர்வமாக எழுதுதல்
ஆய்வைப் பற்றி ஒவ்வொன்றாக விளக்கும் வேளையில் அதற்குத் தேவையான ஆதாரங்கள், ஒன்றை விளக்கும் பொழுது அதற்கான நம்பத்தகுந்த தரவுகள் ஆகியவற்றை இணைக்க வேண்டும்
விளக்கும் ஒவ்வொன்றும் அந்தந்த தலைப்புகளுக்கு ஏற்ப வடிவமைப்பும், எழுத்துக்களின் செரிவும், பக்கங்களின் எண்ணிக்கையும் இருத்தல் வேண்டும்
- நிரூபணம்
அனைத்தையும் எழுதி முடித்த பிறகு, சீரமைப்பு, எழுத்துக்களின் வடிவம், பக்கங்களின் வடிவமைப்பு, பக்க எண்கள் முதலிய அனைத்து படிக்க இனிதாக இருக்க வைக்கும் காரணிகளை சரிபார்க்க வேண்டும்
ஆய்வுக்கட்டுரையை ஒரு முறைக்கு மேல் தீர வாசித்து, சரி பார்க்க வேண்டும். தேவைபட்டால் வேறு இருவரைக் கூட படித்துப் பார்க்கச் சொல்லலாம்
அனைத்து உழைப்பும், முயற்சியையும் இந்த ஆய்வுக்கட்டுரைக்காகவே என்பதை மனதில் கொண்டு, அதற்கேற்ப நாம் தயார் செய்திருக்க வேண்டும்
முக்கியமாக படிப்பவருக்கு எளிதாக புரியும் வண்ணம் அழகாக இயற்றியிருக்க வேண்டும்
அந்தக் கல்வி ஆய்வுக்கட்டுரைக்காக நாம் எவ்வளவு முயற்சி செய்து உழைத்திருக்கிறோம் என்பது படிக்கும் அறிஞர்களுக்கும், நம் ஆய்வுக்கட்டுரையை அங்கீகரிப்பவருக்கும் தெரியும் அளவிற்கு திறம்பட எழுத வேண்டும்
- திட்டவரை