Search The Blog

நகைச்சுவை நாடகங்கள்


மக்களைச் சிரிக்க வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, உருவம், மொழிநடை, அறியாமை, அப்பாவித்தனம் ஆகியவற்றின் அடிப்படையில் புனையப் பெறுவது இது. இதன் தலைப்பே இதனியல்பைப் புலப்படுத்துவதாக அமைவதுண்டு. கேலி, கிண்டல், தரக்குறைவு முதலியன இவற்றில் மிகுந்திருத்தல் இயல்பு.

சங்கீதப் பைத்தியம், வைகுண்ட வைத்தியர், சோம்பேறி, சபாபதி, சகுனம் பார்த்தது போன்றன இவ்வகை நாடகங்களாகும். பம்மல் சம்பந்த முதலியார் இவ்வகை நாடகங்களில் ஆற்றல் படைத்தவராவார்.

நகைச்சுவை நாடகம் (Comedy-drama) எனப்படுவது திரைப்படம், அரங்கு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்தப்படும் நகைச்சுவை மற்றும் நாடகத்தின் கலவை வகையாகும். நகைச்சுவை நாடகம் பெரும்பாலும் தொலைக்காட்சியில் தான் தொடராக எடுக்கப்படுகின்றது. 1990களில் இயக்குனர் நாகா இயக்கத்தில் வெளியான ரமணி வெர்சஸ் இந்த வகைக்குள் அடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக