பக்தி இலக்கியம் பெருமளவில் தோன்றியது பல்லவர் காலத்திலேதான் எனலாம்.ஆனாலும் சேர சோழ காலத்திலும் பக்தி இலக்கியம் பெரும் பங்கு வகித்து உள்ளது என்பது உண்மை. வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. இக்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியம் இருவகைப்பட்டது.
தனித்தனிப் பதிகங்களால் பக்தி அனுபவங்களை வெளிப்படுத்துதல், பிரபந்தங்களாக வெளிப்படுத்துதல் என அவை இருவகையாக உள்ளன. தனித்தனிப் பதிகங்களுள் சில, அகத்துறைகள் தழுவி அமைந்துள்ளன. பெரும்பாலானவை முன்னிலைப் பரவலாகக் கடவுள் வாழ்த்தாக உள்ளன. பிரபந்தங்களுள் பெரும்பாலானவை அகத்திணை இலக்கணங்களுக்கு ஏற்ப அமைந்தவை. பதிகங்களிலும் பிரபந்தங்களிலும் அன்பின் ஐந்திணை தழுவி வந்தவை சிலவே. ஏனைய பல கைக்கிளை, பெருந்திணை சார்ந்தவை. பக்திப் பேரன்பை உணர்த்த அவை பொருத்தமான திணைகள் என்பதே இதற்குக் காரணம் எனலாம். தமிழ்நாட்டுப் பக்தி இயக்கம் சைவம், வைணவம் என்னும் இரு கிளைகளாக பிரிந்து வளர்ந்தது.
சங்க காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் சமண, பௌத்த சமயங்கள் செல்வாக்குப் பெற்றன. தமிழ்நாட்டில் செழித்திருந்த சமண பௌத்தங்களுக்கு எதிராகத் தமிழகத்தின் தொன்மைச் சமயங்களான சைவமும் வைணவமும் பக்தி இயக்கத்தை தொடங்கியது என்றும் சொல்லலாம்.
Search The Blog
பக்தி இலக்கியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக