ஒரு பொருளைப் பற்றிய கருத்துகளைக் கட்டி சிறப்பாக உரைப்பது கட்டுரை இலக்கியம் ஆகும். இது மேனாட்டு இலக்கியத் தாக்கத்தால் எழுந்தது தான் இந்த கட்டுரை இலக்கியம். இது உரைநடையில் அமைவது. இதன் வகைகள் இப்போது பார்க்கலாம்.
- வாழ்க்கை வரலாறு / சுயசரிதை
- ஆராய்ச்சி நூல்கள்
- விளக்க நூல்கள்
- பயண இலக்கிய நூல்கள்
வாழ்க்கை வரலாறு
வாழ்க்கை வரலாறு என்பது ஒருவருடைய வாழ்க்கையின் முழுமையான விளக்கவுரையாகும். இது ஒருவருடைய கல்வி, வேலை, உறவுகள் மற்றும் இறப்பை மட்டும் உள்ளடக்கியதல்ல. ஒருவருடைய வாழ்க்கைச் சாித்திரம் என்பது அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளை விளக்கமாக வர்ணிப்பதாகும். இது ஒரு சிறு வாழ்க்கைக் குறிப்பு போல் அல்லாது, ஒருவருடைய வாழ்க்கை முழுவதையும், அவருடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளையும் உதாரணமாக ஒருவருடைய நெருக்கமான வாழ்க்கை அனுபவங்களையும், அவருடைய ஆளுமையைப் பற்றி விளக்குவதாகவும் உள்ளது.
சுயசரிதை என்பது கதையல்ல. ஆனால் ஒரு கதையில் ஒருவருடைய வாழ்க்கைச் சாிதத்தைச் சித்தாிக்கலாம். இந்த தனிநடையானது இலக்கியம் முதல் சினிமா வரையிலான பல்வேறு ஊடகங்களிலிருந்து உருவானது. அதிகாரம் பெற்ற வாழ்க்கை வரலாறு என்பது யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவருடைய அனுமதி பெற்றோ, அவருடைய ஒத்துழைப்புடனோ அல்லது அவருடைய வழித்தோன்றல்களின் பங்களிப்புடனோ எழுதப்பட வேண்டிய ஒன்றாகும். சுய சாிதை என்பது ஒருவர் தன்னைப் பற்றி தானோ அல்லது உதவியாளரை வைத்தோ எழுதுவது.
முதலில் ஒருவருடைய வரலாற்றை எழுதும் முறை வரலாற்றின் ஒரு துணைப் பகுதியாகவே கருதப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரைப் பற்றி எழுதக் கூடியதாகவே இருந்தது. சுதந்திர வகை வாழ்க்கை வரலாறு எழுதுதல் முறையானது ஆனால் பொது வரலாறு எழுதுதல் முறையிலிருந்து வேறுபட்டது. இந்த முறை 18-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. தற்போதைய நிலையை இது 20-ஆம் நூற்றாண்டில்தான் அடைந்தது.
கார்னீலியஸ் நீபோஸ் என்பவர் முந்தைய பயோகிராஃபி எழுத்தாளர்களில் ஒருவராவார். அவர் கி.மு. 44-ல் எக்லென்ஸியம் கிம்பரேடாரம் விட்டேயி (லைவ்ஸ் ஆப் அவுட்ஸ்டேன்டிங் ஜென்ரல்ஸ்) என்ற நூலை வெளியிட்டார். மிக நீளமான வாழ்க்கை வரலாறான "பாரலல் லைவ்ஸ்" புளுடார்ச் என்பவரால் கிரேக்க மொழியில் எழுதி கி.பி.80-ல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் புகழ்பெற்ற கிரேக்கர்களைப் புகழ்பெற்ற ரோமானியர்களுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு பேச்சாளர் டீமாஸ்தீனன் மற்றும் சீசரோ அல்லது தி கிரேட் அலெக்ஸாண்டர் மற்றும் கீலியஸ் சீசர் மற்றுமொரு பழமையான வாழ்க்கை வரலாறு "டீ விட்டா சீசரம்" சியுடோனியசால் கி.பி. 121-ல் அரசர் காட்ரியன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது.
முந்தைய இடைக்காலத்தில் (கி.பி.400 - 1450) ஐரோப்பாவில் நாகாிகத்தைப் பற்றிய விழிப்புணர்வு குறைந்தது. அந்தச் சமயத்தில் ஒரே ஓர் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தது. ரோமானிய கத்தோலிக்க தேவாலயத் துறவிகள், மதகுருமார்கள் இக்காலத்தை வாழ்க்கை வரலாறு எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டனர். இவர்களுடைய படைப்புகள் மக்களிடையே அகத்தூண்டலை உண்டுபண்ணுவதாகவும் மதமாற்றத்திற்கான ஊடகமாகவும் திகழ்ந்தன. இக்காலகட்டத்தின் வாழ்க்கை வரலாற்றின் மிக முக்கியமான உதாரணமாக உள்ளது. எயின்கார்ட் எழுதிய "சார்ல்மாங்கி்ன் வாழ்க்கை" இடைக்கால இசுலாமிய நாகரீகம் (கி.பி.750 - 1258) இக்காலத்தில் முகமது மற்றும் முக்கியமான தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டன. மற்ற படைப்புகளைக் காட்டிலும் இவ்வகை வாழ்க்கை வரலாறுகள் அதிக சமூகச் செய்திகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. முந்தைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் இஸ்லாமிய துறவிகளின் வாழ்க்கையில் கவனம் செலுத்தின.
அமொிக்க பயோகிராஃபி எழுதும் முறை ஆங்கில முறையை ஒத்திருக்கிறது. இந்த முறை தாமஸ் கார்லியின் கருத்தான வாழ்க்கை வரலாறு என்பது வரலாற்றின் ஒரு பகுதியாகும் என்ற கருத்தை ஒருங்கினைத்து இருக்கிறது. சமுதாயத்தைப் புாிந்துகொள்ள சிறந்த மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறு மிக அவசியமானது என்று கார்லி வலியுறுத்தினார்.
ஆராய்ச்சி நூல்கள்
இலக்கியங்களின் கருத்துகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், காலங்கள் பற்றிய ஆராய்ச்சி போன்றவற்றை வெளியிடும் முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை போன்றனவும் ஆராய்ச்சி நூல்களாகும். வையாபுரிப் பிள்ளை அவர்களின் காவிய காலம், இலக்கிய தீபம், இலக்கிய மணிமாலை, தமிழ்ச் சுடர்மணிகள் போன்றன இவ்வகைக்குத் தக்க சான்றுகளாகும்.
இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் ஆண்டுதோறும் கருத்தரங்கக் கட்டுரைகளை நூலாக்கம் செய்து வெளியிடுகின்றது. இவற்றில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட இன்ன பிற நிறுவனங்களின் கருத்தரங்குகளும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதில் சிறந்து விளங்குகின்றன.
விளக்க நூல்கள்
செய்யுள் நூல்களுக்கு விளக்கம் அளித்தல், ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு பல கோணங்களில் அணுகுதல், பல கருத்துகளை ஒப்பிட்டு ஆராய்ந்து உரைத்தல் ஆகியன இவ்வகை நூல்களின் இயல்பாகும்.
திரு.வி.கலியாணசுந்தரனாரின் சைவத்தின் சாரம், முருகன் அல்லது அழகு, திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், இராமலிங்க சுவாமிகளின் திருவுள்ளம் போன்றன இவ்வகை நூல்களாகும்.
பயண இலக்கிய நூல்கள்
பயணம் தொடர்பான கட்டுரை, கதை, கவிதை, படம், திரைப்படம் ஆகியவற்றை பயண இலக்கியம் எனலாம். மனிதர்கள் நாடோடிகளாக ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்ந்தனர். அப்பொழுது தாம் கண்டவைகளை, கேட்டவைகளை, பட்டறிவை ஓவியமாக, பாடலாக படைத்தார்கள். இம்முயற்சிகள் படிப்படியாக செம்மைபெற்று பயண இலக்கியமாக வடிவம் பெற்றன. ஆனால், இவை அனைத்தும் எந்த கால கட்டத்தில் இலக்கியமாக வளர்ந்தது என்பது அறுதியிட்டுக் கூற முடியாத செய்தியாகும். வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வந்த பயண அனுபவங்களைச் சுவையுடன் எழுதுதல் இவ்வகை நூல்களின் இயல்பாகும். கற்போர், அப்பயணத்தைத் தாமே அனுபவித்தாற் போன்ற மகிழ்வையும் அனுபவத்தையும் பொது அறிவையும் பெறுதல் இதன் பயனாகும்.
பயண இலக்கியம் என்ற துறை தமிழுக்கு புதியது அன்று. பயண இலக்கியம் என்ற பெயரில்லை ஆனால் வேறு பெயர்களில், தமிழ் மொழியில் சில நூல்கள் உள்ளன. ஆற்றுப்படை, வழிநடைச் சிந்து ஆகியவற்றை இவ்வகைப்பாட்டில் அடக்கலாம். பயணம், சுற்றுலா, செலவு, சேத்ராடனம், பிரயாணம் என்பன பயணம் என்னும் பொருளை உள்ளடக்கிய சொற்களே ஆகும். தமிழ் மொழி அகராதி, செலவு என்ற சொல்லுக்கு உத்தரவு, செலவிடுதல், பயணம், பெருங்காப்பிய உறுப்புகளுள் ஒன்று, போக்கு, போதல், முடிவு, வழி என்று பொருள் தருகிறது.
பயண இலக்கியத்தின் நோக்கம் என்வென்றால் நிலப்படங்களும் நிலப்பட வரைவியலும் இல்லாத அக்காலத்தில் பயணிகள் பாதை கண்டறிவதும் அதன் வழி செல்வதும் அவர்களுக்கு பெரும் இடையூறு தரும் செயல்களாகவே அமைந்தன. எனினும் பல்வேறு இடையூறுகளுக்கிடையே அவர்கள் சென்று வந்து, அந்த அறிவை தமக்குப் பின்பு வருவோர் பயன்படுமாறு பயண இலக்கியம் படைத்தனர்.
19, 20 நூற்றாண்டுகளை பயண இலக்கியத்தின் பொற்காலம் என்று கூறலாம். கி.பி. 1988 முதல் 2008 வரையிலான காலப்பகுதியில் தமிழில் ஏறத்தாழ 600 புத்தகங்கள் வெளி வந்துள்ளன. ஜான் மர்டாக் என்பவர் தமிழில் வெளியான நூல்களை எல்லாம் பல்வேறு வகைப்படுத்திப் பட்டியலிட்டார். நூல்களை வகைப்படுத்தி பட்டியலிடும் முறைக்கு இவரே தந்தை எனலாம். பயண நூல் பட்டியலை வகைப்படுத்தி தொகுப்பதன் மூலம் பயண இலக்கியம் பற்றிய முழுமையான சித்திரிப்பை நம்மால் பெற இயலும்.
19 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய உலகில் மட்டுமின்றி இந்திய இலக்கிய உலகிலும் புதிய திசைகளைத் தேடிய நேரம். இந்திய விடுதலை இயக்கம் தமிழ் நாட்டில் காந்திய வழியில் போராடிய நேரம். ஜேம்ஸ் ஆகுஸ்டுஸ் ஹிக்கி வங்காளத்தில் புதிய அச்சு இயந்திரத்தை இந்தியருக்கு அறிமுகப்படுத்தினார். நவீன அச்சு இயந்திரத்தின் வரவால் புத்தகங்கள் கிடைப்பது எளிதானது. புத்தகங்களின் வரவால் மேலை, கீழை நாட்டு இலக்கியங்கள் பற்றிய அறிமுகம் கிடைத்தது. படித்த நடுதர வர்கம் என்று சமூகத்தில் ஒரு புதிய வகை மக்கள் தோன்றினார். கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு என்று ஒவ்வொரு துறையிலும் புதிய திசையை கண்டறிவது அவசியம் ஆனது. புதிய இலக்கிய வகை அறிமுகம் அனைத்து மொழிகளுக்கும் கிடைத்தது.
புகழ்பெற்ற பயண இலக்கியங்கள்:
- உலகம் சுற்றும் தமிழன் - அ. க. செட்டியார்
- பிரயாண நினைவுகள் - அ. க. செட்டியார்
- கனடா முதல் கரிபியன் வரை - அ. க. செட்டியார்
- மகாத்துமாவின் அடிச்சுவட்டில் - அ. க. செட்டியார்
- எனது பிரயாண நினைவுகள் - சோமலே
- பிரிட்டனில்... - நெ. து. சுந்தரவடிவேலு
- புதிய ஜெர்மனியில் - நெ. து. சுந்தரவடிவேலு
- சோவியத் நாட்டில் - நெ. து. சுந்தரவடிவேலு
- சோவியத் மக்களோடு - நெ. து. சுந்தரவடிவேலு
- உலகத் தமிழ் - நெ. து. சுந்தரவடிவேலு
- இதயம் பேசுகிறது (தொகுதிகள்) - மணியன்
- அலைகடலுக்கு அப்பால் - சாரதா நம்பியாரூரான்
- நவகாளி யாத்திரை - சாவி
- வடுகபட்டி முதல் வால்கா வரை - வைரமுத்து
- கொய்ரோவில் - வா. மு. சேதுராமன்
- நூலக நாட்டில் நூற்றியிருபது நாட்கள் - அ. திருமலைமுத்துசுவாமி
- வேங்கடம் முதல் குமரி வரை - 4 பாகங்கள் - தொ. மு. பாஸ்கர தொண்டைமான்
- வேங்கடத்திற்கு அப்பால்.. - தொ. மு. பாஸ்கர தொண்டைமான்
- தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக