Search The Blog

புராண இதிகாச நாடகங்கள்


புராண காலத்தில் வாழ்ந்தவர்கள் பற்றிய கதைகள் முதல் சமூகம், நகைச்சுவை ஆகியவற்றை கொண்ட நாடகங்கள் புராண நாடகங்கள் ஆகும். ராமானுஜர், வாதவூரான், தேவலீலா போன்ற சரித்திர காலத்தில் வாழ்ந்தவர்கள் பற்றிய கதைகளை நாடகமாக்கி மக்களின் மனதில் நின்ற நாடகங்கள் இது.

புராண இதிகாசங்கள் தேவையா?

புராண இதிகாச நாடகங்கள் இன்று மக்களுக்குத் தேவையா? எனச் சிலர் நினைக்கிருர்கள். அவர்கள் நாடக நல்லியல்புகளைப்பற்றி அறியாதவர்கள். மேற் போக்காகப் பார்க்கிருர்களே தவிர ஆழ்ந்து சிந்திப்ப தில்லை. புராண இதிகாசக் கதைகளிலே சொல்லப்படும் பேருண்மைகளும் அறிவுரைகளும் இன்று நடை பெறும் சில முற்போக்கு நாடகங்களிலேகூடக் காணப் படவில்லையே! மகாகவி காளிதாசன், பவபூதி முதலி யோரின் நாடகங்கள் புராண இதிகாசக் கதைகள் தாம். மேல்நாடுகளில் இன்றும் அந்த நாடகங்களின் சிறப்பைப் போற்றுகிருர்களே! நடித்தும் வருகிருர் களே! காளிதாசனின் சகுந்தலை நாடகம் சந்திர மண்ட லத்தை எட்டிப் பிடித்த ருசியாவிலும் இன்று நடிக்கப் படுகிறதே!.சென்னையில் எந்தத்தேமிழ்ப் படமும் ஓடாத அளவுக்குப்பல வாரங்கள் ஒடிய பத்துக் கட்டளைகள்' என்னும் திரைப் படம் புராணக் கதைதான்.

சிறுத்தொண்டர், அரிச்சந்திரன், மார்க்கண்டேயன் முதலானோரின் புராண வரலாறுகளையும், இராமாயண, மகாபாரதங்களாகிய இதிகாசங்களையும் அடிப்படையாகக் கொண்டு புனையப்படுவன இவ்வகையின. லவகுசா இராமாயண அடிப்படையிலும், கிருஷ்ணன் தூது, கர்ண மோட்சம் என்பன மகாபாரத அடிப்படையிலும் இயற்றப் பட்டனவாகும். இவற்றில் வசனங்கள் பழங்கால நடையினவாக அமைதல் வேண்டும். ஒப்பனைகளும் கற்பனை நிலையில் பல்வேறு அணிகலன்களும் கிரீடங்களும் (மணிமுடி) கொண்டு அமைக்கப்படுதல் மரபு. பாடல்கள் இவற்றில் மிகுதியாகக் காணப்படும். இவை மேடை நாடகங்களில் செல்வாக்குப் பெற்றவை. இயற்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல தெய்வீக நிலையில் இவற்றில் இடம்பெறும். இதற்கேற்ப மேடையமைப்பு ஏற்பாடுகளும் அமையும்.

சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வள்ளி திருமணம், சதி அனுசூயா, பவளக்கொடி, அபிமன்யு, பிரகலாதா முதலான நாடகங்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கனவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக