Search The Blog

தமிழ் மொழியின் பழமை


கி.மு. 20,000 க்கு முன் பேச்சு மொழி.கி.மு.20,000-15000 சித்திர எழுத்துக் காலம்.கி.மு.15000-12000 எளிய சித்திர எழுத்துக்கள்.கி.மு.12,000-9000 வரை முதல் வகை அசை எழுத்துக்கள். சிந்து வெளி நாகரிக வகை எழுத்துக்கள் கி.மு.9000-4000வரை நடைமுறையில் இருந்தன.அதன்பின் வட்டெழுத்துக்கள் கி.மு.4000 உருவாகின.

இரண்டாம் வகை வட்டெழுத்துக்கள் கி.மு .2000-1000 நடைமுறையில் இருந்தன.கி.மு 1000ம் முதல் கி.மு.300 வரை உள்ள கால கட்டங்களில் பிற்காலத் தமிழ் பிரம்மி எழுத்துக்கள் உருவானது. நகரித் தமிழ் எழுத்துக்கள் கி.பி.300 காலங்களில் பயன் பாட்டுக்கு வந்தது.தற்போது நாம் பயன் படுத்தும் தமிழ் எழுத்துக்கள் கி.பி. 900 க்கு மேல் படிப்படியாக மாற்றம் பெற்று வளர்ந்தது. கி.பி.எட்டாம் நூற்றாண்டுகளில் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் எதுவும் இல்லை.கிரேக்க மொழியில் தான் பைபிள் போன்றவற்றை ஐரோப்பியர்கள் எழுதி பயன்படுத்தினார்கள். அந்த கால கட்டத்தில் தென் இந்திய மொழிகளும் வடஇந்திய மொழிகளான மராத்தி,குஜராத்தி,உருது, வங்காளி போன்ற மொழிகளும் இல்லை.

Read more

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக