வடமொழி இராமாயண நூல்கள்
யோக வசிஷ்ட (அல்லது) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 அல்லது 12 ஆம் நூற்றாண்டு)
அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 ஆம் நூற்றாண்டு, இராமசர்மர் எழுதியது)
அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்ட காலகட்டம்)
ஆனந்த இராமாயணம் (கி.பி. 15 ஆம் நூற்றாண்டு) வால்மீகி பெயரால் வழங்கப்படுவது
வால்மீகி இராமாயணம்
இராமாயணத்தின் கதை பல மட்டங்களில் தொழிற்படுகின்றது. ஒரு மட்டத்தில் இது அக்காலத்துச் சமூகத்தை விவரிக்கின்றது. பரந்த பேரரசுகள், அடுத்த அரசர்களாக வரவிருக்கும் இளவரசர்களின் வாழ்க்கை, தாய்மாருக்கும் மாற்றாந் தாய்களுக்கும் இடையிலான போட்டி, உடன்பிறந்தோருக்கு இடையிலான அன்புப் பிணைப்பும் விசுவாசமும், இளவரசிகளை மணம் முடிப்பதற்கான போட்டிகள் போன்றவை இவற்றுள் அடக்கம். இன்னொரு மட்டத்தில் இது, நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன், ஒரு தலைவனாக எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதையும், நிலைமைகளை ஒன்றுபோல எதிர்கொண்டு, சமயத்துக்குத் தக்கபடி நடந்து, தனது சொந்தத் துன்பங்கள் முதலியனவற்றுக்கும் அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதையும் காட்டுகிறது. வேறொரு மட்டத்தில் இது, தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்டுவதற்காக மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த விஷ்ணுவின் கதையும் ஆகும்.
வால்மீகி இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவை:
பால காண்டம்: இராமனினதும் உடன்பிறந்தோரினதும் பிறப்பு, கல்வி, திருமணம் என்பவை பற்றிய கதைப் பகுதி.
அயோத்தி காண்டம்: இராமன் சீதையை மணந்து கொண்ட பின்னர் இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்துக் கதைப் பகுதி.
ஆரண்ய காண்டம்: இராமன் காட்டுக்குச் சென்றதும் அங்கு வாழ்ந்ததும்.
கிஷ்கிந்தா காண்டம்: கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும்போது வானரர் நாட்டில் இராமனது வாழ்க்கை.
சுந்தர காண்டம்: சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது, அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய கதைப் பகுதி.
யுத்த காண்டம்: இராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய கதைப் பகுதி.
உத்தர காண்டம்: இராமன் அயோத்திக்கு திரும்ப வந்து அரசனானதையும் சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய கதைப் பகுதி.
"ராமாயணத்தில் வரும் பத்துத் தலை அசுரன் வாழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஓர் உண்மைப் பாத்திரமா அல்லது கற்பனையா என்ற கேள்வியைத் தள்ளி வைத்துவிட்டு, அவன்மூலம் நமக்கு என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும்" என்பது ஆன்மீகவாதிகளின் கருத்து ஆகும்
இராமாயணம் எனப்பட்டது. கம்பராமாயணம் எனும் நூல் குலோத்துங்க சோழனின் ஆணைப்படி கம்பர் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும். இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச்சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர், தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார்.
கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய "உத்திர காண்டம்" என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய "ஒட்டக்கூத்தர்" இயற்றினார் என்பர். இராமர் இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல அயோத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர். மற்றவர்கள் இலக்குவன், பரதன், சத்துருகனன் ஆவர். பொதுவாக இராமர் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று குறிப்பிடப்படுகின்றார்.
கி.மு 4 ஆம் நூற்றாண்டுகள் அளவில் வால்மீகி எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இராமாயணக் காவியத்தின் முக்கிய மாந்தர் இராமர் ஆவார். இராமரைக் கடவுளாக பல கோடி இந்து சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ராமர் ஏக பத்தினி விரதம் கடை பிடித்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்தவர். இராமனை அவதாரமாகக் கருதாமல் சிறப்பானவராகக் (Supreme Being) கருதும் பிரிவுகளும் உண்டு.
(இராமாயணம் தொடரும் ...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக