Search The Blog

ஆன்மிகம்



ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றிய ஞானமாகும், உடம்பினுக்குள்ளே குடிகொண்டிருக்கும் ஆன்மாவை, உலகியல் தொல்லைகளிலிருந்தும், பிறவி, பிணி, மரணம் என்ற தடைகளிலிருந்து மீட்க, ஆன்மாவாகிய தன்னை உணர்ந்து இறைவனோடு சேரும் நெறியாகும். ஆன்மாவை அறிந்து கொள்வதே தன்னை அறிதலாகும்.

ஆன்மிகம் அல்லது ஆன்மவியல் (spirituality) என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய விஷயங்களை சொல்லபவை ஆகும். ஆன்மிகம் மதம், இல்வாழ்க்கை வாழாது இருத்தலை குறிப்பது அல்ல. அதில் இது ஒரு பாகம் எனலாம். அதாவது ஆன்மிக கடலில் நிந்த எதுவும் ஒரு வழி எனலாம். இது மத நம்பிக்கை, ஆழ்நிலை உண்மை என்பவற்றுக்கு நெருக்கமான ஒரு கருத்துரும் எனலாம்.

ஆன்மீகம் என்றால் மத சாயம் பூசுவது அல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம் எனலாம். மேலும் இது மனிதர்களைப் பொருள் சார்ந்த, உயிரியலோடு தொடர்புடைய ஓர் உயிரினமாக மட்டும் கருதாமல், பொருள்சார் உலகையும் காலத்தையும் கடந்ததாகக் கருதப்படும் ஒன்றோடு தொடர்புபட்டவையாகவும், ஐம்புலன்கள் கடந்ததாகவும் கருதுகின்றன. ஆன்மிகம் என்பது, உடல், ஆன்மா என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைக் குறிக்கும் மனம்-உடல் இருமைத் தன்மையையும் உணர்த்துகிறது. இதனால், ஆன்மிகம் என்பது, பொருள் சார்ந்த உலகியல் விசயங்களுடன் முரண்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் மனம் கடந்த பெருநிலையை உணர்த்துவது ஆன்மிகம் ஆகும்.

1 கருத்து: