Search The Blog

நீதி இலக்கியம்

நீதி இலக்கியம் அல்லது சங்க மருவிய கால இலக்கியம் என்பது சங்க காலத்திற்கு பின்னர் தமிழில் தோன்றிய இலக்கியங்களைக் குறிக்கும். கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதி நூல்கள் பல பெருகின எனலாம். சங்க காலத்திற்குப் பின்னர் தமிழகத்தில் களப்பிரர்கள் ஆட்சி ஏற்பட்டு, தமிழில் புது இலக்கியங்கள் தோன்றாவண்ணம் தடையான சூழல் நிலவியதாகக் கருதப்படுகிறது. இக்காரணத்தால் களப்பிரர் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் சங்க காலத்தில் போற்றப்பட்ட காதலும் வீரமும், பின் தள்ளப்பட்டு, அறமும், நீதியும் பெரிதும் போற்றப்பட்டன.
பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என்று தொகுக்கப்பட்டுள்ளவையே நீதி இலக்கிய நூல்கள் என்று கருதப்படுகிறது. திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை முதலியவை இத்தொகுப்பில் அடங்கும். எட்டுத் தொகையும், பத்துப்பாட்டு சங்க கால இலக்கியங்கள் என்பதால் சங்க இலக்கியங்கள் என்றும் 18 நூல்கள் என்பதால் பதிணென் மேற்கணக்கு நூல்கள் எனவும், அழைக்கபடுகின்றன. சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களை சேர்ந்த தொகுதி பதினெண்கீழ்கணக்கு நூல்கள் எனவும் நீதி நூல்கள், அற இலக்கியங்கள் என்றும் அழைக்கிறோம்.

Read more

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக