நான் தமிழில் ஆர்வம் உடைய தமிழ் மங்கை என்பதில் எனக்கு பெருமையே!!.
என் தமிழ் என் உயிர் !!
கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம் தமிழ்மொழியின் பழைய காலமாகும்.
உலக மொழிகளுள் மூத்ததும் முன்னோடியுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்றால் அது மிகையாகாது. உலகில் இருக்கும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 3000-லிருந்து 8000-வரை இருக்கும் என்று மொழியியலாளர்கள் கூறுகிறார்கள். இவற்றுள் சில மொழிகளே எழுதவும் பேசவும் பயன்படுகின்றன. மேலும் வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள் அதனிலும் குறைவே! இவற்றிற்கெல்லாம் தாயாகத் திகழ்பவை ஆறு மொழிகள் என்று பகரலாம்.
யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்;
என்று பாடியதும்,
தமிழுக்கும் அமுதென்று பேர் ! -- அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !
என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியதும், தமிழ்மொழி எவ்வளவு சிறப்புவாய்ந்தது என்று ஒப்புநோக்க தக்கது.
இத்தைகைய சிறப்பு வாய்ந்த தமிழின் பெருமைகளை ஒரு blog போடும் முயற்சிதான் இது. ராமருக்கு பாலம் காட்ட உதவி அணில் போல் தமிழின் சிறப்பை கூற உள்ளேன். தவறுகள் சுட்டிக்காட்டி, நல்லவைகளை பாராட்ட அழைக்கிறேன். வாருங்கள்! தமிழின் பெருமையை பாடலாம்!!!
ஜெய் வியாச ஸ்ரீ
entamilinfo@gmail.com +91 9025013855
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக