Search The Blog

20ம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம்

இருபதாம் நூற்றாண்டு - முதற்பகுதி:

இருபதாம் நூற்றாண்டு ‘தமிழின் மறுமலர்ச்சிக் காலம்’ என்று போற்றப்படுகிறது. மேலைநாட்டவர் தொடர்பு, ஆங்கிலக் கல்வி என்பனவும் தொழிற்புரட்சி, அறிவியல் வளர்ச்சி என்பனவும் இந்திய மக்கள் மனத்திலும் தமிழக மக்கள் மனத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தின. தமிழகத்தைப் பொறுத்தவரை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி புதிய பாதையில் செல்ல

    1. தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் (நாடகம்)
    2. உ.வே. சாமிநாத அய்யர் (பதிப்பு)
    3. பாரதியார் (கவிதை)
    4. புதுமைப்பித்தன் (சிறுகதை)
    5. பாண்டித்துரை தேவர் (தமிழ்ச்சங்கம்)
    6. திரு.வி.க (உரைநடை)
    7. மறைமலையடிகள் (தனித்தமிழ்)
    8. வையாபுரிப்பிள்ளை (ஆராய்ச்சி)

ஆகியோர் காரணமாய் அமைந்தனர். இவர்கள் காட்டிய வழியில் சுதந்திரத்துக்கு முன் தமிழக இலக்கிய வரலாறு எவ்வாறு வீறு பெற்றது என்பதை இந்தப் பாடம் விளக்கிச் சொல்கிறது.

இருபதாம் நூற்றாண்டு - இரண்டாம் பகுதி

இருபதாம் (20ம்) நூற்றாண்டு தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்று போற்றப் பெறுகிறது. இந்தியா விடுதலை அடைந்த பின்பு, நாட்டில் பல்வேறு துறைகளும் வீறுகொண்டு எழுந்தன. மொழியில் உள்ள எழுதப்படாத, எழுதப்பட்ட இலக்கியங்கள் புதிய பாதையில் நடைபயின்றன. ஏற்கெனவே உள்ள இலக்கியத் துறைகள் திறனாய்வு நோக்கில் அணுகப்பட, பிறமொழிப் பயிற்சியறிவால் தமிழில் மொழிபெயர்ப்பியல், நாட்டுப்புறவியல், தொல்லியல், கல்வெட்டியல், நடையியல், இதழியல், மொழியியல், கோயிற்கலை என்ற துறைகள் தோன்றின. அறிவியல் பெற்ற வளர்ச்சி காரணமாகத் தொலைக்காட்சித் தமிழ், கணினித் தமிழ், விளம்பரத் தமிழ், பதிப்புத் தமிழ், திரைத்தமிழ், மேடைத்தமிழ் எனத் தமிழும் வளர்ந்தது.


இருபதாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்


ஆசிரியர்கள் வருடம் நூல்கள்
பாம்பன் குமரகுாச அடிகள் (கி.பி.1851 - கி.பி.1929)
  • குமார சுவாமியம்
  • நாலாயிர பிரபந்த விசாரம்
ஆபிரகாம் பண்டிதர் (கி.பி.1859 - கி.பி.1930)
  • கருணாமிர்த சாகரம்
  • பாணர் கைவழி
சோழவந்தான் அரசஞ் சண்முகனார் (கி.பி.1862 - கி.பி.1915)
  • திருக்குறளாராய்ச்சி
  • தொல்காப்பியப் பாயிர விருத்தி
மாகறல் கார்த்திகேய முதலியார் (கி.பி.1857 - கி.பி.1916) தமிழ்மொழி நூல்
குமார சுவாமிப் புலவர் (கி.பி.1854 - கி.பி.1922) இலக்கிய சொல்லகராதி
வ.உ.சிதம்பரம் பிள்ளை (கி.பி.1872 - கி.பி.1936)
  • மெய்யறிவு
  • மெய்யறம்
  • மனம்போல் வாழ்வு
  • அகமே புறம்
  • வலிமைக்கு மார்க்கம்
  • சுயசரிதை
மறைமலை அடிகள் (வேதாசலம்) (கி.பி.1876 - கி.பி.1950)
  • மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை (2 பாகம்)
  • பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்
  • யோகநித்திரை (அ) அறிதுயில்
  • மனித வசியம் (அ) மனக்கவர்ச்சி
  • குமுதவல்லி
  • நாக நாட்டரசி
  • சோமசுந்தரக் கண்ணியாக்கம்
  • சாகுந்தலம் - (மொழியாக்கம்)
  • கோகிலாம்பாள் கடிதங்கள்
  • சாகுந்தல நாடக ஆராய்ச்சி
  • பட்டினப்பாலை ஆராய்ச்சி
  • முல்லைப் பாட்டு ஆராய்ச்சி
  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
  • சிவஞான போத ஆராய்ச்சி
  • திருக்குறள் ஆராய்ச்சி
  • தொலைவில் உணர்தல்
  • மரணத்தின்பின் மனிதர் நிலை
  • சிந்தனைக் கட்டுரைகள்
  • இளைஞர்க்கான இன்றமிழ்
  • சிறுவர்க்கான செந்தமிழ்
  • உரைமணிக்கோவை
  • அறிவுரைக் கோவை
  • வேளாளர் நாகரிகம்
  • பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
  • முற்கால, பிற்காலத் தமிழ்ப் புலவோர்,
  • தமிழர் மதம்
  • சைவ சித்தாந்த ஞானபோதம்
  • பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்
  • கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா
  • இந்தி பொது மொழியா?
  • சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்
  • திருவாசக விரிவுரை


தொடர்ச்சியை அடுத்த பக்கம் பார்க்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக